UPDATED : அக் 14, 2026 06:27 PM
ADDED : அக் 14, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சி சாமி கோயில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் யோகேஸ்வரன், 16, பிளஸ் 1 படித்து வந்தார். இவரது தந்தை 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறந்த பின், பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரம் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயார் குமுதவள்ளி மகனை கண்டித்து பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
