/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
/
நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை
ADDED : அக் 08, 2024 04:22 AM
விருதுநகர் : அரசு மருத்துவமனைகளில் நிமோனியா காய்ச்சலுக்கான நிமோகாக்கல் தடுப்பூசிகள் வழங்கப்படாததால் தனியார் மருத்துவமனைகளில் அதிக விலை கொடுத்து செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. பகலில் வெயில், மாலையில் மழை என சீதோஷ்ண நிலை தொடர்ந்து மாறுவதால் நிமோனியா பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் சுருங்கி விரிவதில் சிரமம் ஏற்படுகிறது. காய்ச்சல் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விட்டாலும், பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு பத்து நாள்கள் ஆகும். மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 டோஸ் நிமோகாக்கல் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும்.
ஆனால் நிமோகாக்கல் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் ஒரு டோஸ் செலுத்த ரூ. 1000 செலவாகும் என்பதால் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்றால் அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதனால் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனை, மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல் இருப்பது மக்களை பாதிப்படைய செய்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நிமோனியா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.