நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், ஏழாயிரம் பண்ணை கோவில் செல்லையாபுரம் மாரிச்சாமி, 22 க்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் ,அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து சைல்டு லைன் 1098 க்கு புகார் வந்தது. வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. சாத்துார் மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

