/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டி 2 ஆண்டாகியும் திறக்காத ரேஷன் கடை மாதாங்கோவில்பட்டி மக்கள் அதிருப்தி

ADDED : டிச 25, 2025 06:08 AM

சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றியம் மாதாங் கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும். இப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு ஆலை, விவசாய கூலி வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால் ரேஷன் பொருட்களை வாங்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே மாதாங் கோவில்பட்டியில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து மாதங்கோவில் பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 2023 ல் ரூ. 13.16 லட்சத்தில் கடை கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் திறந்த வெளி பாராக மாறிவிட்டது. கட்டடம் சேதம் அடைவதற்குள் புதிய ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.