/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
/
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
ADDED : டிச 25, 2025 06:08 AM

சிவகாசி, டிச. 25 -
விஜய கரிசல்குளத்தில் மூன்று கட்ட அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட வெளி மாவட்ட பள்ளி கல்லுாரி மாணவர்கள் வருகின்றனர்.
நேற்று சென்னையில் இருந்து மக்கள் வந்தனர். இவர்கள் அகழாய்வு கண்காட்சியினை பார்வையிட்டு அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமியிடம் விளக்கம் கேட்டனர்.
அகழாய்வு இயக்குனர் கூறுகையில், ஏற்கனவே வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர். தற்போது சென்னையிலிருந்து பார்வையிட வந்துள்ளனர். இங்கு பல்வேறு அரிதான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அதிகமானோர் வருகின்றனர். அவர்களுக்கு அகழாய்வு பணிகள் குறித்தும் பொருட்கள் குறித்தும் விளக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

