ADDED : மார் 28, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக்கோட்டை அருகே பிளஸ் 1 படித்து வந்த 16 வயது சிறுமியை தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், 20. காதலித்து வந்தார்.
இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 2024 மே 14ல் சிறுமியின் விருப்பத்துடன் காட்டு பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து ஆலங்குளம் ரோட்டில் வாடகைக்கு வீட்டில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் காப்பகம் 1098 உதவி எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தபோது 16 வயதே ஆன சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்ட வாலிபர் மீது போலீசில் புகார் செய்தார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.