/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியில் விஷப் பூச்சிகள்
/
சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியில் விஷப் பூச்சிகள்
சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியில் விஷப் பூச்சிகள்
சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியில் விஷப் பூச்சிகள்
ADDED : டிச 03, 2024 05:17 AM

காரியாபட்டி: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து, திறந்த வெளியாக உள்ளது. விஷப் பூச்சிகளின் நடமாட்டத்தால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். போதிய இட வசதி, அடிப்படை வசதி கிடையாது. இந்நிலையில் இங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் 10 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அதற்குப்பின் சுற்றுச்சுவர் எழுப்ப எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
மாணவிகளின் பாதுகாப்பு கருதி தென்னை ஓலை கொண்டு மறைத்து வைத்துள்ளனர். அது மட்டுமல்ல பள்ளியைச் சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. மழை பெய்து வருவதால் விஷப் பூச்சிகள் அதிக அளவில் நடமாட துவங்கின. சமீபத்தில் நாக பாம்பு, கருநாகம், சாரை உள்ளிட்ட பாம்புகள் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திற்குள் சுற்றித் திரிவதால் மாணவிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
திறந்த வெளியாக இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பள்ளிக்கு வர மாணவிகள் தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.