/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரியல் எஸ்டேட், பைனான்ஸ் மோசடி தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
/
ரியல் எஸ்டேட், பைனான்ஸ் மோசடி தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
ரியல் எஸ்டேட், பைனான்ஸ் மோசடி தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
ரியல் எஸ்டேட், பைனான்ஸ் மோசடி தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
ADDED : டிச 15, 2024 06:11 AM
விருதுநகர்: நான்கு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை ஜெயபாஸ்கர், கீதா, வேணுகோபால், உமாராணி, ஜேக்கப் சுப்புராம், ஜெயசீலன் உட்பட சிலர் நடத்தி மோசடி செய்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ரியல் எஸ்டேட், ஸ்ரீ கிருஷ்ணா குரூப்ஸ், ஸ்ரீ ராதே கிருஷ்ணா குழுமம், ஓம் நம சிவாயா ரியல் எஸ்டேட், அகிரா லேண்ட் மார்க்கெட்டர்ஸ், டெவலப்பர்ஸ் உள்ளிட்ட பெயர்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை ஜெயபாஸ்கர், கீதா, வேணுகோபால், உமாராணி, ஜேக்கப் சுப்புராம், ஜெயசீலன் உட்பட சிலர் சேர்ந்து நடத்தினர்.
இதற்கான தலைமையிடமாக திருநெல்வேலி டவுன் மேலரத வீதியில் சந்திபிள்ளையார் கோவில் வடபுறம் பிரியம் பிளாசா' என்ற அலுவலகத்தை அமைத்தனர். மேலும் நிறுவனத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் பிளாட் தருவதாகவும், பணம் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என கூறி மக்களை நம்ப வைத்தனர். முதலீடு பணத்தை பெற்று கொண்டு நிலத்தை பத்திர பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் தவணை முறையில் பணம் முதலீடு செய்து பத்திரம் பதிவு செய்து தராமல் ஏமாற்றப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, எண்.3, ராஜராஜேஸ்வரி நகர், என்ற முகவரியில் நேரில் புகார் கொடுக்கலாம் , மற்றும் 0462- 255 4300 என்ற போன் எண்ணும் தெரிவிக்கப்பட்டது.