/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் மேற்கு பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அவசியம்
/
ராஜபாளையம் மேற்கு பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அவசியம்
ராஜபாளையம் மேற்கு பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அவசியம்
ராஜபாளையம் மேற்கு பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அவசியம்
ADDED : ஜன 05, 2025 05:32 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபெறும் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு பகுதியான முடங்கியாறு ரோடு, செண்பகத் தோப்பு ரோட்டின் கடைசியில் ஆறுகள் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. இதிலிருந்து நகர் பகுதி தாலுகா அலுவலகம் வரும் வரை ஏராளமான வீடுகள் உள்ளது. இது தவிர விவசாய நிலங்களும் அதிக அளவு அமைந்துள்ளது.
இந்நிலையில் இப்பகுதி குடியிருப்புகளில் அடிக்கடி நடைபெறும் அடிதடி, வெட்டுக்குத்து கொலை, வழிப்பறி, கண்மாய்களில் மண் கடத்தல், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள், மரங்கள், மணல் உள்ளிட்டவை சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுவது அதிகரிக்கிறது.
எனவே அடிக்கடி நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்த போலீஸ் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஆண்டு செக் போஸ்ட் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கிய நிலையில் முடங்கின.
எனவே தென்றல் நகர் ரோடு, முடங்கியாறு ரோடு இரண்டையும் கண்காணிக்கும் வகையில் போலீஸ் செக் போஸ்ட் விரைவில் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.