/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பந்தபாறை ரோட்டில் போலீஸ் செக் போஸ்ட்
/
ஸ்ரீவி., பந்தபாறை ரோட்டில் போலீஸ் செக் போஸ்ட்
ADDED : ஜூலை 02, 2025 07:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை பந்த பாறை ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செண்பகத் தோப்பு ரோட்டிலும், வத்திராயிருப்பு பிளவக்கல் அணை ரோட்டிலும் செக் போஸ்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக டி.எஸ்.பி. ராஜா தெரிவித்தார்.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மண், மணல் உட்பட பல்வேறு கனிம வளங்கள் திருடப்பட்டு வருகிறது.
இதனை அவ்வப்போது போலீசார் பிடித்தாலும் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் புலிகள் காப்பகத்தின் சூழல் உணர்திறன் மண்டலம் பாதிக்கும் வகையில் மண் அள்ளும் இடத்திலேயே செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதனை கடந்த வாரம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கனிம வளங்களை திருட்டை தடுக்க மலை அடிவார ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட் அமைப்பது அவசியம் என ஜூன் 27 தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது பந்தபாறை பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செண்பகத் தோப்பு ரோட்டிலும், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் ரோட்டிலும் செக்போஸ்ட் அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என டி.எஸ்.பி. ராஜா தெரிவித்தார்.