/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஈழப்போர் குறித்து திரைப்படம்- -அனுமதி மறுத்த போலீசார்
/
ஈழப்போர் குறித்து திரைப்படம்- -அனுமதி மறுத்த போலீசார்
ஈழப்போர் குறித்து திரைப்படம்- -அனுமதி மறுத்த போலீசார்
ஈழப்போர் குறித்து திரைப்படம்- -அனுமதி மறுத்த போலீசார்
ADDED : ஜன 13, 2025 01:11 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஈழப்போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை திரையிட போலீசார் அனுமதி மறுத்தனர். எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈழப்போரை மையமாக வைத்து போரில் கொல்லப்பட்ட இசைவாணி என்ற பெண்ணுக்கு செய்யப்பட்ட சித்ரவதைகளை எடுத்துக் கூறும் விதமாக பெங்களூருவை சேர்ந்த இயக்குனர் கணேசன் 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்தை இயக்கினார். இதற்கு திரைப்பட தணிக்கை குழுவினர் தடை விதித்திருந்ததால் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ராஜபாளையம் மோகனா தியேட்டரில் நேற்று காலை திரையிடுவதாக அறிவிக்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கான அனுமதி சீட்டில் போர்க்களத்தில் ஒரு பூ என அச்சிடப்பட்டிருந்தது.
இப்படம் தடை செய்யப்பட்டு இருப்பதால் திரையிட அனுமதி வழங்க முடியாது என போலீசார் காலை காட்சியை ரத்து செய்தனர். இதனையடுத்து தியேட்டருக்கு வந்த பட இயக்குனர் கணேசன், நாம் தமிழர் கட்சியினர், ம.தி.மு.க., கம்யூ., வி.சி., கட்சியினர் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பிரீத்தி தலைமையிலான போலீசார் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி வெளியேற்றினர்.