/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலில் நவீன ரக கேமராக்கள்; போலீசார் எதிர்பார்ப்பு
/
ஆண்டாள் கோயிலில் நவீன ரக கேமராக்கள்; போலீசார் எதிர்பார்ப்பு
ஆண்டாள் கோயிலில் நவீன ரக கேமராக்கள்; போலீசார் எதிர்பார்ப்பு
ஆண்டாள் கோயிலில் நவீன ரக கேமராக்கள்; போலீசார் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2025 05:23 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது அவசியமாகும்.
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்டதுமான ஆண்டாள் கோயிலுக்கு ஆண்டுக்காண்டு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோயில் வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பல கேமராக்கள் செயல்படவில்லை என போலீஸ் தரப்பில், கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை சரி செய்து விட்டதாக செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போதைய கேமராக்கள் மூலம் தெளிவாக காட்சிகள் பதிவாகாத நிலையில், நவீன ரக கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது அவசியம் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

