/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனியாக வசித்த ஓய்வு ஆசிரியை மரணம் போலீசார் விசாரணை
/
தனியாக வசித்த ஓய்வு ஆசிரியை மரணம் போலீசார் விசாரணை
தனியாக வசித்த ஓய்வு ஆசிரியை மரணம் போலீசார் விசாரணை
தனியாக வசித்த ஓய்வு ஆசிரியை மரணம் போலீசார் விசாரணை
ADDED : நவ 25, 2024 05:55 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் தனியாக வசித்த ஓய்வு ஆசிரியை இறந்த நிலையில் கிடந்தார். கழுத்தில் இருந்த தங்க செயின் மாயமானதால் கொலையா என்று கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் 84, ஓய்வு ஆசிரியை. கணவர் காலேப் இறந்த நிலையில், மகன்கள், மகள்கள் திருமணம் ஆகி குடும்பத்தினருடன் தனியாக வசிக்கின்றனர்.
நேற்று காலை வீட்டின் கதவு திறந்த நிலையில் சத்தம் இல்லாததால் அருகாமையில் வசிப்போர் சென்று பார்த்தபோது சமையலறையில் இறந்த நிலையில் கிடந்தார்.
தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறி உறவினர்கள் இறுதி காரியங்களுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
கைகளில் வளையல் மோதிரம் இருந்த நிலையில் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க செயின்களை காணவில்லை என தெரிந்தது. வடக்கு போலீசார் கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.