/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
↓பணியிட மாறுதலுக்கு பின்பு போலீசார் பரிதவிப்பு :↓வார விடுமுறை இல்லாமல் தொடர்பணி
/
↓பணியிட மாறுதலுக்கு பின்பு போலீசார் பரிதவிப்பு :↓வார விடுமுறை இல்லாமல் தொடர்பணி
↓பணியிட மாறுதலுக்கு பின்பு போலீசார் பரிதவிப்பு :↓வார விடுமுறை இல்லாமல் தொடர்பணி
↓பணியிட மாறுதலுக்கு பின்பு போலீசார் பரிதவிப்பு :↓வார விடுமுறை இல்லாமல் தொடர்பணி
ADDED : ஆக 22, 2024 02:11 AM
தேர்தலுக்கு முன்பும், பின்பும் போலீசாரை பணியிட மாறுதல் செய்வது வழக்கம். அது போல மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு பின்பு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதில் சிலர் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கும், பெரும்பாலானோர் புதிய பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
போலீஸ் ஏட்டுக்களும் நீண்ட நாள்கள் பணிபுரிந்த ஸ்டேஷன்களில் இருந்து புதிய பணியிடத்திற்கு சென்றனர். இதனால் பாஸ்போர்ட், ஆன்லைன் புகார்கள் போன்றவற்றில் தேக்க நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது பணியிட மாற்றத்திற்கு பின்பு வார விடுமுறை முறையாக அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
வார விடுமுறை வரும் நாளில் பணி வழங்கி, மற்றொரு நாள் எடுத்துக்கொள்ளுமாறு கூறும் நிலையில் அடுத்த வார விடுமுறை வந்து விடுகிறது. இப்போது தானே விடுப்பு எடுத்தீர்கள் இந்த விடுப்பை மற்றொரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற நிலை தொடர் கதையாக மாறியுள்ளது.
தேர்தல் நேரத்தில் விடுமுறை இன்றி ஆட்கள் பற்றாக்குறையில் பணி செய்து விட்டு, முடிந்ததால் இனி விடுப்பு முறையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போலீசாருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலை எஸ்.ஐ., முதல் ஏட்டு வரை நீடிக்கிறது.
மக்கள் தொகை, தினசரி பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்றாற் போல பல ஸ்டேஷன்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இன்ஸ்பெக்டர் இல்லாமல் எஸ்.ஐ., ஸ்டேஷன்களாக உள்ளது. இதனால் தேவையை விட குறைவாக இருக்கும் போலீசாரை வைத்து கூடுதல் பணிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் சில நேரம் இன்ஸ்பெக்டர் விடுமுறை எடுத்துக்கொண்டால் அவர் பொறுப்பு வகிக்கும் ஸ்டேஷன்களில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னை குறித்து ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தினருடன் நேரத்தை செவழிக்க முடியாமல் பலரும் மன உளைச்சல், வேதனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே மாவட்டத்தில்உள்ள அனைத்து ஸ்டேஷன்களிலும் வார விடுமுறை வழங்குவதை ஆய்வு செய்து, இன்ஸ்பெக்டர் தேவையான ஸ்டேஷன்களுக்கு உடனடியாக நியமித்து போலீசாரின்எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.