பட்டாசு பறிமுதல்: 4 பேர் கைது
சாத்துார்: சாத்துார் செல்லியாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 56.இவருக்கு சொந்தமான ஆட்டுத் தொழுவத்தில் அரசு அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். போலீசார் திருத்தங்கல் மணிகண்டன் 34, சிவகாசி ரோஸ் பாண்டியன்,41. மாணிக்க பிரபு, 23. அவர்களை கைது செய்து. பேன்சி ரக பட்டாசுகளையும், உபகரணங்கள் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
* சாத்துார் அருகே மார்க்கநாதபுரத்தில் தகர செட்டில் துாத்துக்குடி மாவட்டம் படந்தபுலி பிரேம்குமார்,32. அன்பின் நகரம் அசைபா காலனியில் தானியேல்,51. மார்க்கநாதபுரம் தங்கபாண்டியன், 50. விஜயகரிசல்குளம் பாண்டியன், 56. ஆகியோர் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தனர். மேட்டமலை சக்தி பயர் ஒர்க்சில் சிவகாசி மூர்த்தி, 34. அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
* சாத்துார் அருகே மல்லைய நாயக்கன்பட்டியில் உள்ள செல்வி பார்வையில் அரசு அனுமதியின்றி கோடம்பட்டியை சேர்ந்த மாரிச்சாமி, 55. மாரனேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி, 40. வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 42. ஆகியோர் சர வெடிகள் தயாரித்தனர்.போலீசாரை பார்த்ததும் தப்பினர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சாத்துார்: தென்காசி மாவட்டம் மடத்துபட்டியை சேர்ந்தவர் அழகுதுரை .இவர் மனைவி முத்து பிரியா. 23.இருவருக்கும் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடால் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். தாயார் மாரித் தாய் வீட்டில் வசித்து வந்த முத்து பிரியா, பிப்.6 பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்தார். உறவினர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றவர் மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில் பறிமுதல் : ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் கே.முத்துச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆத்திப் பட்டியை சேர்ந்த சத்திய ராஜ், 32.பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் அரசு அனுமதியின்றி 180 மி.லி அளவு கொண்ட மது பாட்டில்களை விற்றார். போலீசார் பெட்டிக்கடையில் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பாக்கெட் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருந்த சேலம் மாவட்டம் என். மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயனை பிடித்துபோலீசார் சோதனை செய்த போது அவரிடம் அரசு தடை செய்துள்ள 20 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. புகையிலை பாக்கெட்டை சாத்துார் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

