பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 57. இவர் கண்மாய் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 20 குரோஸ் கருந்திரிகள், 20 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை
சாத்துார்: சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் விவேகன், 24. லோடுவேன் டிரைவர். மது குடித்து வந்ததால் இவரது மனைவி கண்டித்தார். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
சாத்துார்: வெம்பக்கோட்டை அலமேலு மங்கைபுரத்தை சேர்ந்தவர் ராமசுப்பு, 55.முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் உள்ள தலைமை பொறியாளர் வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அலமேலு மங்கை புரத்தில் உள்ளது. பிப்.15ல் மர்ம நபர்கள் வீட்டில் பின்புற கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து வீட்டு பீரோவில் வைத்திருந்த 12 கிராம் தங்கச் செயின் 2சொத்து பத்திரம், சிசிடிவி கேமரா, டிவிஆர் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார்கள். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் டிரைவர் பலி
சாத்துார்: சாத்துார் பி.டி.ஓ.காலனியை சேர்ந்தவர் ஜோதிக்குமார், 37. ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஆட்டோவில் இருக்கன்குடியில் இருந்து சாத்துார் வந்தார். ஆலம்பட்டி விலக்கில் கன்றுகுட்டி மீது ஆட்டோ மோதி ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டி வந்த ஜோதி குமார் சம்பவ இடத்தில் பலியானார். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

