/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரளாவிற்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் கண்காணிப்பு
/
கேரளாவிற்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் கண்காணிப்பு
கேரளாவிற்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் கண்காணிப்பு
கேரளாவிற்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் போலீசார் கண்காணிப்பு
ADDED : ஏப் 11, 2025 01:55 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை, திருநெல்வேலியில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை வாங்க கேரள வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனை மொத்தமாக வாங்கி 10 கிலோ பைகளாக தயார் செய்து ரயில்கள் மூலம் கடத்தி செல்கின்றனர்.
இதற்காக இதுவரை திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசியை சிறு பைகளில் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மதுரையில் இருந்து விருதுநகர், தென்காசி வழியாக குருவாயூர் செல்லும் ரயிலிலும் வியாபாரிகள் ரேஷன் அரிசியை கொண்டு செல்ல துவங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார், செங்கோட்டை ரயிலில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி பைகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து மதுரை, திருநெல்வேலியில் இருந்து கொல்லம், குருவாயூர், புனலுார் செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தபடுகிறதா என ஸ்டேஷன் போலீசார் மட்டுமின்றி தனிப்படை போலீசாரும் தீவிரமாக ரயில் பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.

