நர்சிங் மாணவிக்கு தொந்தரவு
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி. இவரது வீட்டில் பால் மாடு உள்ளது. இங்கு பால் வாங்கி வியாபாரம் செய்ய அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த வைரமுத்து மகன் ஐவராஜா 25, வந்து சென்றவர் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் மாணவி கர்ப்பமானார். தகவல் தெரிந்த பெற்றோர் ராஜபாளையம் மகளிர் போலீசில் புகார் அளித்ததில் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் போக்சோவில் வழக்கு பதிந்து தலைமாறைவாகிய ஐவராஜாவை தேடுகின்றனர்.
கஞ்சா: 3 பேர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் வடக்கு போலீசார் ரோந்து சென்ற போது நான்கு முக்கு பகுதியில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த முத்துலிங்கம் 20, என்பவரிடம் சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.
* தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றபோது கோவையிலிருந்து பஸ்சில் வந்த செட்டியார்பட்டியை சேர்ந்த திலீப் குமாரிடம் 19, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் 25 கிராம் இருந்தது தெரிந்தது.
* சேத்துார் முப்புடாதி அம்மன் கோவில் அருகே இனாம் கோவில்பட்டியை சேர்ந்த செல்லச்சாமி 62, கஞ்சா 20 கிராம் வைத்திருந்ததை கைப்பற்றி மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
டிராக்டர்கள் பறிமுதல்
சேத்துார்: சொக்கநாதன் புத்துார் பகுதிகளில் மண் திருட்டு நடைபெறுவதாக தகவலை அடுத்து வருவாய் துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டனர். பாண்டி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு சவடு மண் அள்ளி வந்த இரண்டு டிராக்டர்களை சோதனை இட்டதில் அரசின் அனுமதி இன்றி கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டர்களை கைப்பற்றி சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: கிளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ் 25. இவர் தனக்கு சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் செட்டில் அனுமதி இன்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
* திருத்தங்கல் செங்கமலப்பட்டி திருப்பதி நகரைச் சேர்ந்த ராசையா 50 அதிவீரன்பட்டி ரோட்டில் அனுமதி இன்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருந்தார். பாண்டியன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் 43 தனது வீட்டின் அருகே அனுமதி இன்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருந்தார். இருவரையும் கைது செய்து திருத்தங்கல் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.