விபத்தில் பலி
சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் குருசாமி 54. இவர் தனது டூவீலரில் சென்றபோது சாட்சியாபுரம் பாரதி நகரை சேர்ந்த ஆனந்த் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் குருசாமி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி நியூ ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சிதம்பரம் 17. இடப் பிரச்சனை சம்பந்தமாக இவர் மீது நீதிமன்றம் விசாரணை உள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த சிதம்பரம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: சிவகாசி சாணார்பட்டியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் 53. இவர் அப்பகுதியில் உள்ள முள் புதரில் அனுமதி இன்றி பட்டாசு பதுக்கி வைத்திருந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
கார் மீது வேன் மோதல்
விருதுநகர்: சாத்துார் அருகே பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் காரில் பாலவநத்தம் -- கோட்டூர் ரோட்டில் சென்று போது கடமன்குளத்தைச் சேர்ந்த கார்மேகசெல்வம் ஓட்டி வந்த வேன் மோதியதில் பழனிசாமி, உறவினர் தனலட்சுமி காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுவால் பலி
சாத்துரை: ராஜபாளையம் சோழபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 35. பட்டாசு ஆலை தொழிலாளி தாயில்பட்டியில் தங்கி பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஆளானார். 2 நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் ஆலோசனையை மீறி மது குடித்ததால் மயங்கி கீழே விழுந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்:பெண் கைது
சாத்துார்: சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணதேவி, 39. இவருக்கு சொந்தமான குடோனில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் குடோனில் இருந்த 20 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.