நகை திருட்டு
விருதுநகர்: என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் வசந்தி 34. இவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 தங்க மோதிரங்கள் திருடப்பட்டுள்ளது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா: வாலிபர் கைது
விருதுநகர்: ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் 26. இவர் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.
கோயில் உண்டியலை திருட முயற்சி; 2 பேர் கைது
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அடுத்த அட்டை மில் முக்கு ரோட்டில் சிவசக்தி விநாயகர் கோயில் உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வழக்கம் போல் நிர்வாகி கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் கோயில் உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் கடை வைத்திருந்தவர்கள் சத்தமிட்டபோது இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளனர். கீழ ராஜகுலராமன் போலீசார் கோயிலை திறந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. கண்காணிப்பு கேமரா சோதனையில் ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெரு சுரேஷ் 30, ஸ்ரீரெங்கபாளையம் ராமச்சந்திரன் 28, என தெரிந்து இருவரை கைது செய்துள்ளனர்.
வட மாநில சிறுவன் சடலமாக மீட்பு
ராஜபாளையம்: ஒடிசா மாநிலம் கரன்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயதேவ் முலா. மனைவி இரண்டு பிள்ளைகளுடன் ராஜபாளையம் அருகே சோழபுரம் பகுதியில் தங்கிய தனியார் ஸ்பின்னிங் மில் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டிலிருந்த மகன் ஜெயபிரகாஷ் 14, கடந்த வாரம் காணவில்லை என தளவாய்புரம் போலீசில் புகார் அளித்து தேடி வந்தனர். இந்நிலையில் கிழவிகுளம் கிராமம் வடக்கு பகுதியில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது காணாமல் போன ஜெயப்பிரகாஷ் என தெரிந்தது. சிறுவன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்; நான்கு பேர் கைது
சிவகாசி: நமஸ்கரித்தான் பட்டி வேல்முருகன் 32, சாமிபுரம் காலனியில் பட்டாசுகளை பதுக்கி இருந்தார். கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
* சிவகாசி மாரிமுத்து தெரு முருகேந்திரன் 49, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் தகர செட்டில் பட்டாசுகளை வைத்திருந்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
* திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி 68. இவர் தனது வீட்டின் அருகே தகர செட்டில் மிஷின் திரிகள் பொருத்தப்பட்ட குழாய்கள், மிஷின் திரிகளை வைத்திருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
*சிவகாசி பள்ளபட்டி மாரியம்மன் நகரை சேர்ந்தவர் கார்மேகம் 45 இவர் தனது வீட்டில் அரசு அனுமதியின்றி கார்ட்டூன் பட்டாசுகள் வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.--