தாய் மகனுக்கு அரிவாள் வெட்டு
சிவகாசி: சிவகாசி அனுப்பன்குளம் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் இமானுவேல் 37. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணிக்கும் இடப் பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இமானுவேல் அவரது சகோதரி செல்வ லட்சுமி 45, செல்வ லட்சுமியின் மகன் செல்வ பாலாஜி 19, ஆகியோர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணி ,வீரபாண்டி ,வீரலட்சுமி, ஈஸ்வரி ஆகியோர் செல்வலட்சுமியையும், செல்வ பாலாஜியையும் அரிவாளால் வெட்டினர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு வெடித்ததில் தகராறு
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பனையடிப்பட்டி தெருவை சேர்ந்தவர் மணிகண்ட ராஜா 27. பட்டாசு தொழிலாளியான இவர் அதே பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் 27, தகாத வார்த்தை பேசி, பட்டாசினை கொளுத்தி மணிகண்ட ராஜா மீது துாக்கிப் போட்டதில் காயம் அடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மோட்டார் திருடியவர் கைது
சாத்துார்: சாத்துார் கோசுகுண்டு வைசேர்ந்தவர்கள் சரஸ்வதி, 61. ராமன் ,80.இவர்கள் வீட்டில் இருந்த போர்வெல் மோட்டாரை மர்ம நபர் திருடி சென்றார். போலீஸ் விசாரணையில் என் .மேட்டுப்பட்டி கருப்பசாமி 45, மோட்டார்களை திருடி சென்றது தெரிய வந்தது அவரிடம் இருந்து 2கம்பரசர் மோட்டார்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
டீசல் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் பெத்துரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பரமசிவன், 45. உப்பத்துார் விலக்கில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கு டீசல் விற்பனை செய்தார். போலீசார் அவரது கடையிலிருந்து 5 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.