கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
சிவகாசி: சரஸ்வதி பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணன் 19. இவர் மணிநகர் பஸ் ஸ்டாப்பில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாணவருக்கு பீர் பாட்டிலால் அடி
சிவகாசி: ஏ.துலுக்கப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் 18. சாத்துாரில் உள்ள கல்லுாரியில் படித்து வரும் இவர் தேன் காலனியைச் சேர்ந்த உத்தமராஜாவுக்கு சொந்தமான இடத்தில் மது அருந்தியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உத்தம ராஜா, செல்வம், ஜெயக்குமார், மகேஸ்வரன் ஆகியோர் பிரவீன் குமாரினை தகாத வார்த்தை பேசி பீர் பாட்டிலால் தலையில் அடித்து விரலை கடித்து காயப்படுத்தினர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் தற்கொலை
ராஜபாளையம்: ராஜபாளையம் சங்கரன்கோவில் மூக்கு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் முருகன். இவரது மகன் ஹரிஸ் குமார் 21, வெளிநாடு வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்துள்ளார். அதற்கான வாய்ப்பு தொடர்ந்து தள்ளி போய் வந்ததால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.