கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
சிவகாசி: நாரணாபுரம் ரோடு முருகன் காலனியைச் சேர்ந்த சுடலை பாண்டி 25, பட்டி தெரு தங்கராஜ் ஆகியோர் சிவகாசி காளியம்மன் கோயில் தெருவில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். இருவரையும் டவுன் போலீசார் கைது செய்து ஒரு கிலோ கஞ்சா டூ வீலரை பறிமுதல் செய்தனர்.---
சாத்துார்: சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர்கள் சிவசங்கர்,22. வெற்றிவேல், 20.இருவரும் பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்று கொண்டிருந்தனர்.போலீசார் அவர்களை சோதனை செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சாத்துார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
-----பஸ் மோதி முதியவர் பலி
சிவகாசி: அனுப்பன்குளம் பேராபட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் 63. இவர் சிவகாசியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த சங்கிலி கருப்பசாமி ஓட்டி வந்த பஸ் மோதியதில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் மாயம்
சாத்துார்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 72.இருக்கன்குடி கோயிலில் நடைபெற்று வரும் சிற்ப வேலைக்கு உதவி செய்வதற்காக நவ.7ல் இருக்கன்குடிக்கு வந்தார். நவ. 22ல் சொந்த ஊர் செல்வதாக கூறி விட்டுக் கிளம்பியவர் ஊரு சென்று சேரவில்லை.இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
குழாய் திருட்டு
சாத்துார்: சாத்துார் தாயில் பட்டியில் ஜே.ஜே.திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பித்தளை நல்லியை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.----