நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயங்கிய இளைஞர் பலி
விருதுநகர்: பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 30. இவர் லட்சுமி நகர் சித்தர் கோயில் அருகே நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மயங்கி கிடந்தார். இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
விருதுநகர்: அல்லம்பட்டி சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் சுங்கரபாண்டியன் 73. இவர் வீட்டில் நிறுத்தியிருந்த டூவீலரை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை எலுமிச்சங்காய் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் 45. வீட்டில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.