லோடுவேன் கவிழ்ந்து மூவர் காயம்
சிவகாசி: திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் பாபு 20, லிங்கம்மாள் குளம் மணிமுருகன் 30, உட்பட நண்பர்கள் சிவகாசியில் உள்ள நண்பரின் திருமணத்திற்காக வந்திருந்தனர். இவர்களை திருமணத்திற்கு நாரணாபுரம் புதுார் ரோடு அம்மன் நகரை சேர்ந்த தங்கபாண்டி 24, தனது லோடு வேனில் ஏற்றிச் சென்றார். நாரணாபுரம் புதுார் ரோட்டில் சென்ற போது வளைவில் வாகனம் திரும்புகையில் கவிழ்ந்தது. இதில் சுரேஷ்பாபு, முருகன், 14 வயது சிறுவன் காயம் அடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
சிவகாசி: தேவர்குளம் விஸ்வம்நகர் ராஜா காலனியை சேர்ந்தவர் சாமுவேல் 19. இவர் ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப்பில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். டவுன் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
வெவ்வேறு விபத்து: மூவர் காயம்
சிவகாசி: திருத்தங்கல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி 32. இவர் தனது டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் சென்ற போது விவேகானந்தர் காலனியை சேர்ந்த மாயக்கண்ணன் 28, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் 34. இவர் தனது டூவீலரில் ரயில்வே பீடர் ரோட்டில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி பதுக்கியவர் கைது
விருதுநகர்: குருமூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மதன்குமார் 22. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க தேவைப்படும் ஒரு குரோஸ் மிஷின் திரி பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.