நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
விருதுநகர்: விருதுநகர் துலுக்கப்பட்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையேநேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற வந்தேபாரத் ரயிலில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் அடிப்பட்டு பலியானார். இவர் ஊதா நிற டி-சர்ட், சந்தன நிற பேண்ட் அணிந்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தீக்குளித்த பெண் பலி
சேத்துார்: சேத்துார் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி திருமலை 45, மகள் பத்மபிரியாவுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதத்தால் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. டிச.14ல் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபமடைந்த பத்மபிரியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.