மனைவி மாயம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னமரெட்டியபட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டி 29 இவரும், அதே ஊரைச் சேர்ந்த சண்முகப்பிரியா,29, வும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவை அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாப்பிலிருந்து விருதுநகருக்கு பஸ் ஏற்றி விட்டு கணவர் ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் மனைவி வீட்டிற்கு வரவில்லை. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ மீது பஸ் மோதி வியாபாரி பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் 42, லோடு ஆட்டோவில் வீடு வீடாக சென்று பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். பணி முடிந்து நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு சத்திரப்பட்டி ரோட்டில் திரும்பும்போது ஸ்ரீவில்லிபுத்துார் சென்ற அரசு பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்து இறந்தார். பஸ் டிரைவர் ராமசுப்பு மீது தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் குறுக்கே நாய் வந்த விபத்தில்எஸ்.ஐ., காயம்
தளவாய்புரம்: செட்டியார்பட்டி அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் இருதய அருள்ராஜ் 52, ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளார். டிச.19ல் பணி முடிந்து டூவீலரில் சென்றபோது ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் நாய் குறுக்கே வந்தது நிலை தடுமாறி விழுந்து கணுக்கால் சிதைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்துள்ளார். தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கஞ்சா: வாலிபர் மீது வழக்கு
விருதுநகர்: பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் 24. இவர் கருப்பசாமி நகரில் விற்பனை செய்வதற்காக 20 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததார். இவர் மீது ஊரகப் போலீசார் வழக்கு பதிந்தனர்.