திருநம்பி மாயம்
சாத்துார்: சாத்துார் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் காவிய பிரியா, 19. திருநம்பியாக மாறியதால் தன் பெயரை கவின் என அழைத்துக் கொண்டார். ஜன.6ல் மாலை 6:30 மணிக்கு தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுவெளியே சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----ஆயுதங்களுடன் திரிந்த மூவர் கைது
சிவகாசி: சிவகாசி தெற்கு தெரு ஹரி பிரியன் 22, விஸ்வநத்தம் சுப்ரீம் நகர் செண்பகராஜ் 25, நடராஜன் காலனி மகேந்திரன் 25, ஆகியோர் மணி நகர்முக்கு பகுதியில் கையில் கத்திகளுடன் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்தனர். மூவரையும் டவுன் போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் மாணவர் பலி
வாடிப்பட்டி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி மணிகண்டன் மகன் விக்னேஷ் பாண்டி 22. சிவகங்கை மாவட்டம் தனியார் சட்டக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர். அதேபகுதி யுவராஜ் 19, ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் இருந்தும் அணியவில்லை) கோவை சென்றனர். விக்னேஷ் பாண்டி ஓட்டினார். சமயநல்லுார் நான்குவழிச்சாலை ரயில்வே மேம்பால ஏற்றத்தில் சென்ற காய்கறி வேனின் பின்னால் மோதி விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் யுவராஜ் நேற்று இறந்தார். விக்னேஷ் பாண்டி சிகிச்சையில் உள்ளார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

