தீப்பெட்டி தொழிலாளி பலி
சிவகாசி: திருத்தங்கல் சிறுவர் பூங்கா தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் 55. இவர் சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். அங்கு பாத்ரூம் செல்வதற்காக நடந்து சென்ற போது மயங்கி கீழே விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
அலைபேசி திருட்டு
விருதுநகர்: அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணக்குமார் 54. இவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஜன. 10ல் அலைபேசியை சார்ஜரில் போட்டு துாங்கினார். மீண்டும் எழுந்து பார்க்கும் போது அலைபேசி திருடு போனது தெரிந்தது. ரயில்வே போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களை ஆராய்ந்ததில் பாண்டியனர் நகரைச் சேர்ந்த ரவி (எ) டேவில் 23, திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகை திருட்டு; பெண் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் பச்சமடத்தை சேர்ந்தவர் சரவணகுமார். மனைவி குழந்தைகளுடன் தரை தளத்திலும், பெற்றோர் மாடியில் வசிக்கின்றனர். இந்நிலையில் வீட்டு வேலைக்கு திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி 37, வேலை இருந்து விடுமுறைக்கு சென்றிருந்த போது வீட்டில் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகை காணாமல் போயுள்ளது. போலீசார் மகேஸ்வரியிடம் விசாரித்ததில் திருடியதை ஒப்புக்கொண்டபின் நகையை மீட்டு கைது செய்துள்ளனர்.
பட்டாசு பறிமுதல்
சாத்துார்:- சாத்துார் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி 42. வீட்டின் அருகே கூரையமைத்து 20 பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். ஏழாயிரம் பண்ணை போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.