மதுபாட்டில்கள் பறிமுதல் 5 பேர் கைது
சாத்துார்: வெம்பக்கோட்டை செல்லையாபுரத்தில் விஜய கரிசல்குளத்தை சேர்ந்த முத்து இருளப்பன்,30. வெற்றிலையூரணிஅம்பேத்கர் காலனியில் பாண்டி 33.மேலக் கோதை நாச்சியார் புரத்தில் ஆனந்த், 42.நென்மேனியில் சுரேஷ், 32. ஒ.மேட்டுப்பட்டியில் முனீஸ்வரன், 44. ஆகியோர் 180 மி.லி. அளவு கொண்ட மதுபாட்டில்களை அரசு அனுமதியின்றி விற்பனை செய்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தடுமாறி கீழே விழுந்தவர் பலி
சிவகாசி: பெரிய வாடியூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் உதயகுமார் 40. இவர் திருத்தங்கல் அருகே தனது உறவினரின் இறப்பிற்காக வந்திருந்தார். அங்கிருந்து கிளம்பி சுக்கிரவார்பட்டி ரோட்டில் மது போதையில் நடந்து வரும் போது கீழே விழுந்து காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பலி
விருதுநகர்: மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 38. இவர் டூவீலரில் (ஹெல்மட் அணிந்திருந்தார்) செப். 18 இரவு 9:30 மணிக்கு விருதுநகரில் இருந்து சூலக்கரை செல்ல விருதுநகர்- சாத்துார் நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
விருதுநகர்: கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் 42. இவர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலர் திருடு போனது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.