நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயர் திருடியவர் கைது
சிவகாசி: சிவகாசி மாரனேரி ராஜதுரை நகரை சேர்ந்தவர் பிரேம் சுதன் 45. இவர் அதே பகுதியில் புதிதாக கட்டும் வீட்டிற்கு போர்வெல் அமைத்து அதற்கான கேபிள் வயரை மீட்டர் பெட்டியில் பொருத்தியுள்ளார். முனீஸ் நகரைச் சேர்ந்த வேலு 32, கேபிள் வயரை திருடினார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.
தற்கொலை
சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சிவலிங்கம் 29. ரீல் கட்டிங் வேலை செய்து வரும் இவர் சொந்தமாக தொழில் வைப்பதற்காக மனைவியின் நகையை வாங்கினார். வாங்கிய வாகனத்திற்கு தவணை கட்ட முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். இதனால் மனம் உடைந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

