மதுபாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் பீக்கிலிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. 58.தமிழ்நாடு ஓட்டல் அருகே காட்டுப்பகுதியில் 150 மி.லி அளவு மது பாட்டிலைஅரசு அனுமதி இன்றி விற்பனை செய்தார் ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் .சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பாக்கெட் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் சோலையப்பன், 54. இவரது பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட் விற்பனை செய்தார். அவரது கடையை போலீசார் சோதனை செய்து 10 புகையிலை பாக்கெட் கடை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.
அலைபேசி வழிப்பறி
4 பேர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் அருகே முள்ளிச்செவல் அருகில் பீகாரைச் சேர்ந்தவர் நிருபம் தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார். ஜன.31 இரவு வேலை முடித்து விட்டு தனியாக தான் தங்கியிருக்கும் இடத்திற்கு நிரூபம் நடந்து சென்ற போது அவரை வழி மறித்து துாத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தாலுகாவை சேர்ந்த சின்னச்சாமி, 19. மூப்பன் பட்டி முகில் ராஜ், 20. உருளை குடி மனோ, 19. மேலும் 15 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து அவர் வைத்திருந்த அலைபேசியை பறித்து சென்றனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.