முதியவரிடம் பணம் பறித்த இருவர் கைது
சாத்துார்: எஸ்.ஆர். நாயுடுநகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ,82.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு ரயில்வே பீடர் ரோட்டில்நடந்து சென்ற போது இரு நபர்கள் கட்டையால் தலையில் அடித்து அவர் பையில் வைத்திருந்த ரூ 3500-யை வழி பறி செய்தனர். போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரித்த போது அவர்கள் செல்லியாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரிஸ்வரன் , 22. சந்துரு , 21.என்பது தெரிய வந்தது.ஏற்கனவே இதே போன்று முதியவர் ஒருவரிடம் அவர்கள் இருவரும் வழிப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
சாத்துார்: எத்தல் ஹார்வி ரோட்டில் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி அருகில் 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய், மகள் உட்பட மூன்று பேர் காயம்
சிவகாசி: நடுவப்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 40. பட்டாசு தொழிலாளியான இவர் தனது 12 வயது மகளுடன் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் நடந்து சென்ற போது ரங்கபாளையம் நடுத்தெருவை சேர்ந்த கணேஷ் குமார் 21, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

