/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் செய்திகள்/ அடகு வைத்த நகையை உருக்கியவர்கள் மீது வழக்கு
/
போலீஸ் செய்திகள்/ அடகு வைத்த நகையை உருக்கியவர்கள் மீது வழக்கு
போலீஸ் செய்திகள்/ அடகு வைத்த நகையை உருக்கியவர்கள் மீது வழக்கு
போலீஸ் செய்திகள்/ அடகு வைத்த நகையை உருக்கியவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 04:21 AM
அடகு நகையை உருக்கியவர்கள் மீது வழக்கு
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் சேடன் கிணற்று தெருவை சேர்ந்தவர் சரவணன் 38. இவர் சிவகாசி வேலாயுத ரஸ்தா பகுதியில் அடகுகடை நடத்தி வரும் லட்சம், பாண்டியராஜ் ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் பெற்று உள்ளார். அதன்பின் அடகு கடையில் 13 அரை பவுன் தங்க நகையை அடகு வைத்து ரூ.6,44,800 கடன் பெற்று உள்ளார். அடகு நகையை பணம் கட்டி மீட்க சென்ற போது, நகையை உருக்கி விட்டதாகவும், ரூ.2 லட்சம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து நகை சரியாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரவணன் சிவகாசி நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அடகு கடை உரிமையாளர்கள் லட்சம், பாண்டியராஜ் மீது டவுன் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
கார் மோதி பெண் பலி
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி சித்ரா 31. பாப்பாங்குளத்திற்கு தோட்ட வேலைக்கு சென்று, வீடு திரும்ப, அந்த வழியாக வந்த பார்த்திபன் ஓட்டி வந்த டூவீலரில் லிப்ட் கேட்டு வந்தார். வீரசோழன் அருகே வந்த போது, அப்துல் காதர் ஜெய்லானி ஓட்டி வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சித்ரா உயிரிழந்தார். பார்த்திபன் லேசான காயத்துடன் தப்பினார். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சாத்துார் : செவல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 25. இவரது நண்பர் கொட்டமடக்கி பட்டி கார்த்திக் 20, இருவரும் செப்.22 மாலை 5:30 மணிக்கு டூவீலரில் (இருவரும்ஹெல்மெட் அணியவில்லை) கீழாண்மறைநாடு சென்றபோது எதிரில் திருவேங்கிடபுரம் நந்தகோபால் ஒட்டி வந்த டிராக்டர் மோதியதில் மணிகண்டன் பலியானார். படுகாயம் அடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.