மினி பஸ் மோதி பெண் காயம்
விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 59. இவர் கணவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தார். மதுரை, ஆவல்சூரன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி 35, மினிபஸ் ஒட்டி வந்து சுப்புலட்சுமி மீது ஏற்றியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்த முதியவர் பலி
விருதுநகர்: திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 64. இவர் திருத்தங்கலில் உள்ள சகோதரரை பார்க்க டிச. 23 காலை 11:30 மணிக்கு சென்றார். விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி டிச. 30 காலை 11:10 மணிக்கு பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவிகள் மாயம்
விருதுநகர்: சூலக்கரை மேட்டைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி 19. இவர் தனியார் கல்லுாரியில் இளங்கலை விலங்கியல் பயின்று வருகிறார். இவர் டிச. 30 மதியம் தன் சகோதரர் உடன் தொலை பேசி கட்டணம் செலுத்த சென்றார். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் மதியம் 2:00 மணிக்கு மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த மணி என்பவருடன் டூவீலரில் சென்றுவிட்டார்.
* விருதுநகர்: கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சக்தி சுகுணா 21. இவர் சொந்த ஊர் துாத்துக்குடி. கனமழை பாதிப்பால் கலைஞர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். டிச 18 மதியம் 2:30 மணிக்கு கடைக்கு சென்றுவருவதாக கூறி சென்றவரை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.