தாய், மகள் மாயம்
சாத்துார்: வெம்பக்கோட்டை இனாம் மீனாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன் 57. இவருடன் வசித்து வந்த இவர் மகள் பாலகுரு 35. பேத்தி அர்ச்சனா 16, இருவரையும் டிச. 22ல் இருந்து காணவில்லை என குருநாதன் போலீசில் புகார் செய்துள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மீது கார் மோதல்: இருவர் காயம்
சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் பரணி 19. கருத்தபாண்டி 19. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். சாத்துார் இருக்கன்குடி ரோட்டில் நத்தத்துப்பட்டி விலக்கு அருகே சென்ற போது. சத்திரப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் 28, ஓட்டி வந்த கார் இவர்கள் மீது மோதியது. டூவீலரில் வந்த இருவரும் காயம் அடைந்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி
சிவகாசி: சுக்கிரவார்பட்டி மேலுாரை சேர்ந்தவர் வேணுகோபால் 23. தனது டூவீலரில் திருத்தங்கலில் தனது நண்பரை இறக்கி விடுவதற்காக சென்றவர் மீண்டும் அதிவீரன்பட்டி ரோட்டில் வரும்போது ஓடை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
சிவகாசி: லட்சுமியாபுரம் ரயில்வே கேட் அருகே அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் 18, கஞ்சா வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.