முன்னாள் மாணவிகள் சந்திப்பு
சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுரி முதுநிலை இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. . கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் , இயற்பியல் துறை தலைவர் கிங்ஸ்லின் மேரி ஜெனோவா முன்னிலை வகித்தனர். துணை பேராசிரியர் விக்னேஸ்வரி வரவேற்றார். 1997 முதல் 2000 வரை கல்லுாரியில் படித்த இயற்பியல் துறை மாணவிகள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவி பவானி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்தனர்.
_____
கருத்தரங்கம்
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் வெற்றிக்கு வழி காண்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாணவன் அபிஷேக் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா வாழ்த்தினார். திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மாணவர் ஜெயசுதா விக்னேஷ் பேசினார். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது பற்றிய அடிப்படை அறிவு வளர்த்துக் கொள்ளும் நோக்கில் கருத்தரங்கம் நடந்தது. ஆங்கிலத் துறையைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி துர்கா தேவி நன்றி கூறினார்.
_____