லாட்டரி பறிமுதல்: 3 பேர் கைது
சாத்துார்: சாத்தூர் பஸ் நிலையம் அருகே சம்சுதீன் 55, கிருஷ்ணசாமி 56, மணிசங்கர் 40, ஆகியோர் வெளி மாநில லாட்டரி சீட்டு என்று மோசடியாக நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களையும் லாட்டரி விற்ற பணம் ரூ.10,200 ஐ போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் மீது போக்சோ
சாத்துார்: வெம்பக் கோட்டை கொங்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி 25. வீட்டில் வைத்து 2023ல் செப்.8ல் 16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். சிறுமியை திருமணம் செய்த கருப்பசாமி மீது வெம்பக்கோட்டை சமூகநல விரிவாக்க அலுவலர் ஆனந்த ஜோதி 58, போலீசில் புகார் செய்துள்ளார். அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரயில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகை மாயம்
விருதுநகர்: துாத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் செண்பக வள்ளி. இவர் வீட்டில் இருந்து 20 பவுன் நகைகளை பேக்கில் வைத்து ரயிலில் விருதுநகர் வந்துள்ளார். விருதுநகர் பி.எஸ்.என்.எல்., குடியிருப்புக்கு வந்து பார்த்த போது நகைகளை காணவில்லை. இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரயில்வே கூடுதல் போலீஸ் இயக்குனர் உத்தரவின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.