sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 13, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 13, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர் மாயம்

சாத்துார்:ஆலங்குளத்தை வண்ணி இவர் மகன் லோகேஸ்வரன், 14. பத்தாம் வகுப்பு மாணவர் . நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லை. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல்

சாத்துார்: சாத்துார் பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு,60. இவருக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த சத்ய குமார், 50. இருவருக்கும் இடையில் நில சம்மந்தமாக முன் பகை உள்ளது. சம்பவத்தன்று பாப்பாக்குடி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ராமசுப்புவை வழிமறித்த சத்யகுமார் எனது வழியில் குறுக்கிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

சாத்துார்: சாத்துார் மேட்டமலையை தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் முத்துராஜ், 21. நேற்று முன்தினம் அதே தெருவில் உள்ள அன்னலட்சுமி42, என்பவர் வீட்டிற்கு முன்னால் நடந்து சென்ற போது எனது வீட்டின் முன்னால் ஏன் நடந்து செல்கிறாய் எனகேட்டஅன்னலட்சுமி, அவரது சகோதரர்கள் சிவக்குமார், 23. சரவணக்குமார், 21. ஆகியோர் அடித்து உதைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தம்பதி மீது தாக்குதல்: 16 பேர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசி ஊராம் பட்டி புது காலனி சேர்ந்தவர் அன்னலட்சுமி 50. இவரது கணவர் ராஜா 55. இவர்கள் தங்களது வீட்டின் முன்பு வேலி அமைத்திருந்தனர். இதனை அதே பகுதியில் வசிக்கும் முனியசாமி, மேரி உள்ளிட்டோர் நடந்து செல்லும் வழியை எதற்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் முனியசாமி, மேரி, குனியவதி, செல்வி, பன்னீர்செல்வம், காளீஸ்வரி, கருப்பசாமி உட்பட பதினாறு பேர் அன்னலட்சுமி, ராஜாவை தாக்கினர். மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏலச்சீட்டு மோசடி: மூவர் மீது வழக்கு

ராஜபாளையம்: திருச்சியை சேர்ந்த இளங்கோவன், செல்ல கண்ணன், பிரகாஷ் மூவரும் ராஜபாளையத்தில் ஜோதி பர்னிச்சர் கடை வைத்திருந்தனர். சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏலச்சீட்டு நடத்தி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சந்தா செலுத்த தேவையில்லை என ஆசை வார்த்தை கூறி உறுப்பினர்கள் சேர்த்து தொகை வசூலித்துள்ளனர். சேத்துாரை சேர்ந்த சுரேஷ்குமார் உள்ளிட்ட பலரும் உறுப்பினராக சேர்ந்து கட்டிய பணத்திற்கு பர்னிச்சர் வழங்க கேட்டுள்ளனர். ஸ்டாக் வந்ததும் தருவதாக கூறியவர்கள் கடையை பூட்டி சென்றனர். பலரிடம் வசூல் செய்து ஏமாற்றி தலைமறைவானதாக இளங்கோவன், செல்ல கண்ணன், பிரகாஷ் மூவர் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us