-நகை திருடியவர் கைது
தளவாய்புரம்: தலவாய்புரம் சாலியர் தெருவை சேர்ந்தவர் பூபதி 34, இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க தோடுகள், இரண்டு ஜோடி சிறிய மோதிரம், தங்க காசு என ரூ.37,000 மதிப்புள்ள தங்க நகைகள் , ரூ. 8,600 ரொக்கம் திருடு போனது. இது தொடர்பாக புனல்வேலியை சேர்ந்த ஜான் 43, என்பவரிடம் விசாரித்ததில் திருடிய நகை ,பணம் கைப்பற்றி அவரை தளவாய்புரம் போலீசார் செய்தனர்.
உண்டியல் உடைப்பு: வாலிபர் கைது
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அடுத்த கீழ ராஜகுமாராமன் அருகே எரிச்சீஸ்வர அய்யனார் கோயில் உள்ளது. ஜன.2ல் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. கோயில் நிர்வாகி சுப்புராஜ் வளாகத்தில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் காம்பவுண்ட் சுவரில் ஏறி கதவை திறந்து உண்டியலை திருடியது தெரிந்தது. கீழராஜகுலராமன் போலீசார் அட்டை மில் பகுதியை சேர்ந்த அருண்குமாரை 20 கைது செய்தனர்.
கோயில் சீல் உடைப்பு
சேத்துார்: சேத்துார் அருகே சுந்தர்ராஜபுரம் மாரியம்மன் கோயில் தொடர்பாக கிராமத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் வருவாய் துறையினர் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் கோயில் பூட்டில் வைக்கப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. கிராமத்தினர் கோயில் முன்பு கூடி சம்பவத்தில் ஈடுபட்ட வரை கண்டுபிடிக்க கோரினர். சேத்துார் ஊரக போலீசார் கிராமத்தினரை சமாதானம் செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

