கார் மோதி விபத்து
விருதுநகர்: ஆர்.ஆர்., நகரின் ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 32. இவர் பணிமுடிந்து டூவீலரில் ஜன. 20 நள்ளிரவு 12:50 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே ரயில்வே கேட் கடந்து சென்ற போது துாத்துக்குடி, காமராஜ் நகரைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் 31, காரில் வந்து மோதியதில் பாலமுருகன் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
மினி வேன் மோதி விபத்து
அருப்புக்கோட்டை: பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தனம் 31. இவர் டூவீலரில் ஜன. 21 மதியம் 12:15 மணிக்கு பணி முடிந்து கோவிலாங்குளத்தில் இருந்து வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அழகேந்திரன் மினிவேனில் வந்து மோதியதில் சந்தனம் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கடன் திரும்ப தராததால் தாக்குதல்
திருச்சுழி: கோணப்பநேந்தலைச் சேர்ந்தவர் ராஜாங்கம் 50. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமியிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் ஜன. 20 மதியம் 2:00 மணிக்கு பொன்னுசாமி, மகன் தர்மராஜ் தாக்கியதில் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
கட்டட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
சிவகாசி: கட்டச் சின்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 22. கட்டட தொழிலாளியான இவர் 7 மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் திருத்தங்கலைச் சேர்ந்த மலர் கொடியை காதலித்து வந்தார். இந்நிலையில் அவரை மலர் கொடியின் உறவினர்கள் கார்த்திக் உள்ளிட்டோர் விருதுநகர் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தை பேசி அரிவாளால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.