பெண் தற்கொலை
விருதுநகர்: யானைக்குழாயைச் சேர்ந்தவர் நாகஜோதி 23. இவரும் மாதவன் என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மாதவன் மது குடிப்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்தது. இந்நிலையில் பிப். 11 காலை 10:30 மணிக்கு நாகஜோதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய், மகன் மீது தாக்குதல்
விருதுநகர்: வெள்ளூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கமாரி 36. இவர் வீட்டில் வளர்க்கும் நாயை பிப். 4 இரவு 8:00 மணிக்கு தொந்தரவு செய்து குலைக்கச் செய்த கார்த்தீஸ்வரனை தட்டிகேட்டதால் தங்கமாரி, மகன் பாலாஜியை தாக்கியதில் காயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரிவாள் வெட்டு
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே மண்குண்டம்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ், 35. இவரது பாட்டி வீ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த வீரசின்னம்மாள் தனது இரண்டு ஏக்கர் நிலத்தை அவருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாய் மாமா சுப்புராஜ், நேற்று முன்தினம் காலையில் ஆட்டுக்கறி அறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டமுயன்றார். தடுத்ததில் கையில் வெட்டு விழுந்தது. காயமடைந்த காளிராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் ஓ.பி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 25. வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்தார். குடும்பத்தினர் கண்டித்த நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-