தாக்குதல்: 3 பேர் கைது
விருதுநகர்: கம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் 24. இவர் பிப். 12 இரவு 11:20 மணிக்கு நடந்து சென்ற போது முன்விரோதம் காரணமாக ரோசல்பட்டியைச் சேர்ந்த அருண், மாரி செல்வம், ஜக்கம்மாள் புரத்தைச் சேர்ந்த குமரேசன் தாக்கியதில் பிரகாஷ் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
டூவீலர் மோதி மூவர் காயம்
விருதுநகர்: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 37. இவர் வேனில் லோடுடன் பிப். 7 இரவில் பி. குமாரலிங்கபுரம் பஸ்டாப் அருகே வந்த போது டயர் வெடித்ததால் உணவருந்த நடந்து சென்ற போது பின்னால் டூவீலரில் குடும்பத்துடன் வந்த திருத்தங்கலைச் சேர்ந்த பெரியசாமி 28, மோதியதில் ஜெயக்குமார், பெரியசாமி, மனைவி அழகம்மாள் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி
சிவகாசி: சிவகாசி மீரா உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது சுல்தான் 40. உசேன் காலனியில் சென்ற போது முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சாமுவேல் 21, வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. ஆயிரம் பறித்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
-- முதியவர் தற்கொலை
சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் பூச்சன் காலனியை சேர்ந்தவர் வேலுச்சாமி 60. சைக்கிள் கடை நடத்தி வரும் இவர் இரண்டு ஆண்டாக மாத சீட்டு நடத்தி வந்தார். சீட்டுக்காலம் முடிந்த நிலையில் பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியாமல் இருந்தார். இவரது பிள்ளைகள் ஒரு சிலருக்கு பணத்தை கொடுத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டனர். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டூ வீலர் மோதி பலி
சத்திரப்பட்டி: வெம்பக்கோட்டை தாலுகா டி. கரிசல் குளத்தை சேர்ந்தவர் குமார் 54, கூலி தொழிலாளி. காளவாசல் அருகே இரண்டு நாள் முன்பு ரோட்டை கடந்த போது எதிரே வந்த டூ வீலர் மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். டூவீலரில் வந்த டி.கரிசல்குளம் மணிகண்டனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது குடித்தவர் பலி
சாத்துார்: ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா ,47. நேற்று முன்தினம் அதிகளவில் மது குடித்துவிட்டு நடந்து சென்ற போது தடுமாறி கீழே விழுந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

