பெண் மீது தாக்குதல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் வனதேவி 36. இவருக்கும் அருகில் குடியிருக்கும் உறவினரான சக்திவேலுக்கு முன்பகை இருந்தது. இந்நிலையில் சக்திவேல், வனதேவியின் கணவரை தகாத வார்த்தை பேசினார் . தட்டி கேட்ட வனதேவியையும் தகாத வார்த்தை பேசி கட்டையால் அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----பாம்பு கடித்து குழந்தை பலி
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் 18 மாத குழந்தை கவி முத்து வை பாம்பு கடித்தது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் 42. இவர் புதிதாக வீடு கட்டுவதற்காக சிலரிடம் ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.