கொத்தனார் மாயம்
சாத்துார்: சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் ,40. கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். பிப்.12ல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலைக்கு சென்றவர் மாயம்
சாத்துார்: சாத்துார் கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 53. ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழக்கடையில் பணி புரிந்து வந்தார்.பிப்.14ல் வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
விருதுநகர்: மீசலுார் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 55. இவர் மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி பதுக்கல், இருவர் மீது வழக்கு
விருதுநகர்: வெள்ளூர் கிழக்கு தெருகாலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 42. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க தேவையான மிஷின் திரி 200 எண்ணம் பதுக்கி வைத்திருந்தார். அதே போல எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாரிக்காளை 30. இவரும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க தேவையான மிஷின் திரி 1000 எண்ணம் பதுக்கி வைத்திருந்தை கண்டறிந்து இருவர் மீதும் ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.