கம்பியால் தாக்குதல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் ராஜகுரு 40. இவர் தனது கணவர் முனியாண்டி, தாயார் மாரியம்மாள் ஆகியோர் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கே.கே., நகரைச் சேர்ந்த கண்ணன் 32, ரமேஷ், கருப்பசாமி ஆகியோர் தகாத வார்த்தை பேசி முனியாண்டியை கம்பியால் அடித்து மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சிவகாசி: சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது அப்துல் ரகுமான். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. முகமது அப்துல் ரகுமான் மது அருந்தி வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி சத்தம் போட்டார். இந்நிலையில் அவர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சினேகா 40. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் இவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதாப் என்பவர் வெளிநாட்டில் நர்ஸ் வேலையில் சேர்த்து விட்டார். வேலை பிடிக்காமல் மீண்டும் ஊருக்கு வந்த இவர் பிரதாப்புடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை அவரது கணவர் விஜயகுமார் கண்டித்தார். இந்நிலையில் லட்சுமி சினேகா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.---
மனைவியை குத்திய கணவர்
சாத்துார்: சாத்துார் நத்தத்து பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி, 50. இவர் கணவர் சேவுகன், 55. பிப்.20ல் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். மனைவி தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த சேவுகன் அவரை கத்தியால் குத்தினார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் மோதி பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரதத்தை சேர்ந்தவர் பெத்தையா 62, முதுகுடி அருகே சைக்கிளில் ரோட்டை கடந்த போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வேன் டிரைவர் வேல்முருகனிடம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.