-----கஞ்சா பறிமுதல்
சிவகாசி: ஹவுசிங் போர்டு சக்தி நகரை சேர்ந்த எலிசா பிரவீன் 27, விஸ்வநத்தம் காமராஜர் காலனி கோபி ஆகியோர் பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். திருத்தங்கல் போலீசார் இருவரையும் கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
-----பட்டாசு பறிமுதல்
சிவகாசி: திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் செல்வராஜ் 57. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி உரிமம் இன்றி பட்டாசு தயாரித்தார். திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
-------கத்தியுடன் திரிந்த இருவர் கைது
சிவகாசி: ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டி 20, சிலோன் காலனி பொன் மாரீஸ்வரன் 20, ஆகியோர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே  கத்தியுடன் திரிந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்கையில் கணேஷ் பாண்டியின் அண்ணனை கொன்றவர்களில் ஒருவரை கொல்வதற்காக கத்தியை எடுத்து வந்ததாக தெரிவித்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
-----தற்கொலை
சிவகாசி: பூலாவூரணியை சேர்ந்தவர்  சங்கிலி 57. மது அருந்தும் பழக்கம் உள்ள இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி 52. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
----மூதாட்டி மீது தாக்குதல்
சிவகாசி: கிருஷ்ணம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ருக்குமணி 60. இவரது வீட்டின் அருகே  குடியிருக்கும் மகாலட்சுமி 62, இவரது வீட்டின் முன்பு தலை வாறினார்.
இதற்காக சத்தம் போட்ட  ருக்குமணியை மகாலட்சுமி, சங்கரேஸ்வரி 40, புழுகையா 53, ஆகியோர் கம்பால்  அடித்தனர்.  எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
-----ரூ.2.76 லட்சம் திருட்டு
சிவகாசி:  சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் 58.  சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில்  கேசியராக வேலை பார்த்து வரும் இவர் வங்கியில் காசோலை கொடுத்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் வாங்கினார். அந்தப் பணத்தை வேலாயுத ரஸ்தா ரோட்டில் உள்ள வங்கியில் தனது கம்பெனி அக்கவுண்டில் போடுவதற்காக தனது டூவீலரின் சைடில் தொங்கவிட்டு கொண்டு சென்றார்.
தண்ணீர் வாங்குவதற்காக தனது டூவீலரில் நிறுத்திய போது அடையாளம் தெரியாத இருவர் முகவரி கேட்பது போல் நடித்து டூவீலரில்  இருந்த பணத்தை அபேஸ் செய்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். -

