பட்டாசு பறிமுதல்: 4 பேர் கைது
சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர்கள் வைரமுத்து 42, மணி 40, தாயில்பட்டி முனீஸ்வரன் 59.விஜயகரிசல்குளம் கார்த்திக், 38. ஆகியோர் வீட்டில் வைத்து சோல்சா, சரவெடி தயாரித்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சாத்துார்: வெம்பக்கோட்டை அம்மையார் பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் நல்லமுத்து 24. டிராக்டர் டிரைவர் மார்ச் 16ல் மாலை 5:45 டிராக்டரை துலுக்கன்குறிச்சி -- வெம்பக்கோட்டை ரோட்டில் ஓட்டிச் சென்றபோது திடீர் என வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பார் தொழிலாளி பலி
விருதுநகர்: மேலரதவீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் 40. இவர் டாஸ்மாக் பாரில் வேலை செய்து கொண்டு மது குடித்து வந்துள்ளார். மார்ச் 16 காலை 7:00 மணிக்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேரடி அருகே இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அசோக்குமார் எஸ்.ஐ., தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்டபம், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுரை மாவட்டம் சென்னம்பட்டி சுப்பிரமணி, அச்சம்பட்டி ராமர், கரியனேந்தல் ராமர், பள்ளத்துப்பட்டி முருகன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

