தற்கொலை
சிவகாசி: திருத்தங்கல் விஸ்வகர்மா நகரை சேர்ந்தவர் சோலை மோகன்ராஜ் 58. டிரைவர் வேலை பார்த்து வரும் இவர் பிள்ளைகளின் திருமணத்திற்காக, கடன் வாங்கி இருந்தனர். கடனை எப்படி அடைப்பது என மன வருத்தத்தில் இருந்த சோலை மோகன்ராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
-----விபத்தில் பெண் பலி
சிவகாசி: சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் 54. இவர் தனது டூவீலரில் மகள் ஜோதியை ஏற்றிக்கொண்டு பழனியாண்டவர் புரம் காலனி ரோட்டில் வரும்போது பள்ளபட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த முருகன் ஓட்டி வந்த லோடு வேன் மோதியதில் நாகராஜ் காயமடைந்தார். ஜோதி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
-----தந்தையை அடித்த மகன் மீது வழக்கு
சாத்துார்: ஆலங்குளம் நரி குளத்தைச் சேர்ந்தவர் ராமர், 55. இவரது மூத்த மகன் முத்துப்பாண்டி, 24. மார்ச் 17 தந்தை ராமர் வீட்டிற்கு மது போதையில் வந்த முத்துப்பாண்டி சொத்தை பிரித்து கேட்டு அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
4 பவுன் செயின் மாயம்
அருப்புக்கோட்டை: சாத்தூர் அருகே சொக்கலிங்கபுரம் குண்டலகுத்தூரை சேர்ந்தவர் சென்னம்மாள், 62, இவர் நேற்று முன்தினம் அரசு பஸ்ஸில் அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளார். மதியம் 12:30 மணிக்கு அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறினார், பின் பர்சை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 4 பவுன் செயின், 200 ரூபாய் பணத்தை காணவில்லை. அருப்புக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
300 கிராம் கஞ்சா: இளைஞர் கைது
சேத்துார்: சேத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வடக்கு பகுதியில் சந்தேக படும்படி நின்றிருந்த சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ராம்குமார் 22, வைத்திருந்த பையில் சோதனை செய்ததில் 300 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முகவூர் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சதீஸ்ராம் 24, கல்லுாரியில் படித்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்துார் உறவினர் வீட்டுக்கு சென்று டூவீலரில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சென்று திரும்பிய போது தனியார் கல்லுாரி பஸ் எதிர்பாரா விதமாக மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

