பெண் மாயம்
சாத்துார்: செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் ஏப்ரல் 1ல் சாத்துாரில் உள்ள சகோதரி வீட்டிற்கு குடும்பத்தினருடன் வந்தார். அன்று மாலை 5:30 மணிக்கு அவரது மூத்த மகள் யோகேஸ்வரி, 21, வீட்டிலிருந்து மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்
சாத்துார்: இருக்கன்குடி பஸ் ஸ்டாப்பில்அடையாளம் தெரியாத 72 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடந்தார்.அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியாத நிலையில் போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி தற்கொலை
சாத்துார்: சாத்துார் தென்வடல் புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஜான்சி ராணி, 62. சர்க்கரை நோயால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஏப். 1 விஷ பொடியை மயங்கினார். மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் மாயம்
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி இவர் தந்தை அருணகிரி, 75. மார்ச் 29ல் தேன் எடுக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தொரட்டி கம்பு துாக்குவாளியுடன் சென்றவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.